தமிழகம் வரும் பிரதமர் மோடி, அதிபர் ஜின் பிங்கை வரவேற்கிறோம் : இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்  அறிக்கை: உலகமே பொருளாதார நெருக்கடிக்குள் ஆழ்ந்து கிடக்கும் நிலையில், ஒரு புதிய பொருளாதார முறைமையை உருவாக்கும் சூழலை இந்தியாவும், சீனாவும் சேர்ந்து ஏற்படுத்த முடியும். இந்த இருநாடுகளின் கூட்டுறவில் ஒரு புதிய உலக முறைமை உருவெடுக்க வேண்டும். பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாட்டுக்கு வருகை தரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு நெஞ்சார வரவேற்கிறது என கூறியுள்ளார்.

திருமாவளவன் (விசிக): பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பை உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கிறது. இந்துமாக்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை அதிகரித்துக்கொள்வதற்கும்; இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண சீனாவின் ஒத்துழைப்பைக் கேட்டுப்பெறுவதற்கும் இந்த சந்திப்பை பிரதமர் பயன்படுத்திக்கொள்வார் என எதிர்பார்க்கிறோம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பு வெற்றிபெற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்.

Related Stories: