காங். மக்களவை தலைவர் கருத்து ராகுல் போன்ற தலைவர்கள் அரசியலில் அரிதானவர்கள்

கொல்கத்தா: மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். பல மூத்த தலைவர்கள் சமாதானம் செய்தும் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். அதைத் தொடர்ந்து, சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக இருந்து வருகிறார்.  இந்த நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் நேற்று அளித்த பேட்டியில், ‘தோல்வியால் ராகுல் விலகியதால் கட்சி தள்ளாடுகிறது. எங்கள் பெரிய பிரச்னையே ராகுல் விலகியதுதான். அவர் மீண்டும் தலைவராக வேண்டும்,’ என்றார்.

Advertising
Advertising

இதற்கு பதில் அளித்துள்ள காங்கிரசின் மக்களவை கட்சி தலைவரான ஆதிர் சவுத்ரி, ‘‘ராகுல் மீண்டும் தலைவராக வந்தால் நல்லதுதான். அதே நேரம், அவரது தார்மீக பொறுப்பேற்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும். தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகும் ராகுலை போன்ற தலைவர்கள், இந்திய அரசியலில் அரிதானவர்கள். எல்லோரும் அவரிடம் இருந்து பாடம் கற்க வேண்டும். இதுவரை வேறெந்த கட்சி தலைவராவது தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகி இருக்கிறாரா? நிச்சயம் இல்லை. இதன் மூலமாக ராகுல் ஓர் உதாரண தலைவராகி உள்ளார்,’’ என்றார்.

Related Stories: