காருக்குள் காதல் ஜோடி தற்கொலை

சேலம் : சேலத்தில் காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி, சயனைடு தின்று தற்கொலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் செவ்வாய்பேட்டை அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபி. இவரது மகன் சுரேஷ் (22). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர், கோபியின் வெள்ளி தொழிலை கவனித்து வந்தார். இதேபோல், குகை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரவி என்பவரின் மகள் ஜோதிகா (21). ஓமலூர் அருகே உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். சுரேஷூம், ஜோதிகாவும் கடந்த இரு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும், ஜோதிகாவின் வீட்டில்  எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக இருவரையும் கண்டித்துள்ளனர்.

Advertising
Advertising

இதனிடையே, நேற்று முன்தினம் காதலர்கள் இருவரும் திடீரென மாயமாகினர். அவர்களை உறவினர்கள் தேடி வந்தனர். ஜவுளிக்கடை பஸ் ஸ்டாப் அருகே உள்ள சுரேஷின் கார் ஷெட் முன்பு, இரு டூவீலர்கள் நின்றிருந்தது. உடனே, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் இருவரும் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்தனர். தகவலறிந்து வந்த செவ்வாய்பேட்டை போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, நடந்த விசாரணையில், பெற்றோர் எதிர்ப்பால், இருவரும் சாக்லெட்டில் சயனைடை கலந்து சாப்பிட்டிருக்கலாம் எனவும், இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்திருக்கலாம் தெரியவந்தது. இருந்தபோதிலும், இருவரும் நேற்று முன்தினம் யாரிடம் எல்லாம் பேசினார்கள் என்றும், அவர்களது செல்போன் பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: