அமைச்சர் பேட்டி வேலை தேடி வெளி மாவட்டம் செல்லும் நெல்லை இளைஞர்கள்

நெல்லை : நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலில் அமைச்சர் உதயகுமாருக்கு கேடிசி நகர், கீழநத்தம், அரியகுளம் பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தெற்கு அரியகுளம் பகுதியில் நேற்று அவர் வீதி, வீதியாகச் சென்று பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது அமைச்சர் உதயகுமார் அளித்த பேட்டி:

Advertising
Advertising

நாங்குநேரி தொகுதி முழுக்க, முழுக்க விவசாயிகளை நம்பியுள்ள தொகுதியாகும். தாமிரபரணி ஆறு ஓடினாலும் குளங்கள், நீர்நிலைகளை நம்பியே மக்கள் விவசாயம் செய்கின்றனர். தமிழக முதல்வரின் குடிமராமத்து பணிகள் அதற்கு பேருதவியாக உள்ளது. இங்குள்ள இளைஞர்கள் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கு செல்கின்றனர். முதல்வர் எடப்பாடி 16 நாட்களுக்கு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து அந்நிய முதலீட்டைக் கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

Related Stories: