2022ம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை இந்தியா அனுப்பும்: இஸ்ரோ துணை இயக்குனர் பேட்டி

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ மைய துணை இயக்குனர் ரங்கநாதன் அளித்த பேட்டி:  2022ம் ஆண்டு கஹன்யா என்ற ராக்கேட் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில் 3 பேர் அனுப்பி  வைக்கப்படவுள்ளனர். பூமியை சுற்றி வந்து பிறகு இறங்கும் வகையில் ராக்கெட் வடிவமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் விண்ணில் ஏவப்படும். இதனால் உலகளவில் அனைத்து விதமான தகவல்களை தெரிவிக்கவும், உள்நாட்டில் காடு  வளம், கடலில் மீன் பெருக்கம், நாட்டின் வளம், நகரமைப்பு, எல்லை ஊடுருவல், கடல் ஊடுருவல் உள்ளிட்ட தகவல்களை தெரிவிக்க முடியும். இந்திய நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertising
Advertising

Related Stories: