போக்குவரத்தை தனியார் மயமாக்க கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். போக்குவரத்துத்துறையை பொதுத்துறையாக  நீடிக்கும் முடிவை அரசு கைவிட்டதாகவே தெரிகிறது. இது கண்டனத்திற்குரியது. தமிழகத்தின் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மக்களின் தொழிலுக்கும், பொருளாதார செயல்பாட்டிற்கும் பேருதவியாக இருக்கிற போக்குவரத்துக் கழகங்களை  தனியார்மயமாக்கும் எந்த முயற்சியையும் மாநில அரசு எடுக்கக் கூடாது என்றும், மின்சாரப் பேருந்துகளை மாநில அரசே இயக்க வேண்டும் தொழிலாளர் வேலைவாய்ப்புகளைப் பறிக்கக் கூடாது.

Related Stories: