போலி மின்வாரிய வேலை விளம்பரத்தால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்: தொமுச முதல்வருக்கு கடிதம்

சென்னை:  தொமுச நிர்வாகி சரவணன், முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள கடிதம்: தமிழக மின்சாரவாரியத்தில், அதிகாரிகள், அலுவலர்கள், களத்தொழிலார்கள் என, 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, காலி பணியிடங்கள் உள்ளன.  இதேபோல் கேங்மேன் என்ற பதவி உருவாக்கப்பட்டு, 5,000 பேர் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின் வாரிய வேலைவாய்ப்பு தொடர்பாக, போலி விளம்பரங்கள், இணையதளங்களில் அதிகளவில் வெளியாகி  வருகின்றன.இதனால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த விளம்பரங்களில், மின்வாரியத்தின் லோகோ இருக்கிறது. இதில், தவறான தகவலை கூறி சிலர் அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர். தன்னிச்சையாக  விரைவில் வாரியத்தில் காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் கூறுகின்றனர். எனவே போலி விளம்பரங்கள் தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: