செண்பகத்தோப்பு மலைப்பகுதியில் உள்ள ‘மினி குற்றாலத்தில்’ ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு மலைப்பகுதியில் மினி குற்றாலம் என அழைக்கப்படும் என ‘மீன் வெட்டி பாறை அருவியில்’ தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக பெய்த மழையால் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு மலைப்பகுதியில் ‘மினி குற்றாலம்’ என்று அழைக்கப்படும் ‘மீன் வெட்டி  பாறை’ அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் மினி குற்றலாத்தில் குளித்து வருகின்றனர். மேலும், ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர்  விடுமுறையை முன்னிட்டு மீன் ெவட்டி பாறை அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
Advertising
Advertising

Related Stories: