இஸ்லாமாபாத்: அண்மையில் பாகிஸ்தானின் தலைநகர் கராச்சியில் இருந்து புறப்பட்ட ரயிலில் பொறுத்தப்பட்டிருந்த வழிகாட்டும் எல்.இ.டி பலகையில் சேரும் இடம் லாஸ் ஏஞ்சல்ஸ் என்று காண்பித்ததால் பயணிகள் குழப்பம் அடைந்தனர். இதை பார்த்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வைராலான நிலையில் அதை பார்த்த சமூகவலைதள வாசிகள் பலரும், டிக்கெட் விலை எவ்வளவு, எப்போது நிலவுக்கு ரயில் விடுவதாக திட்டம் என அந்நாட்டு ரயில்வேத் துறையை சரமாரியாக கிண்டல் அடித்து பதிவிட்டனர்.