விண்வெளியில் முதன்முறையாக இறைச்சியை வளர்த்து சாதனை

இஸ்ரேலைச் சேர்ந்த அலெப் பார்ம்ஸ் எனும் உணவு நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் வைத்து மாட்டிறைச்சியை வெற்றிகரமாக வளர்த்துக் காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.இறைச்சியை வளர்த்து காட்டும் முயற்சியில் இறங்கிய இஸ்ரேலைச் சேர்ந்த அலெப் பார்ம்ஸ் எனும் உணவு நிறுவனம், ரஷ்யாவைச் சேர்ந்த பயோபிரிண்டிங் நிறுவனத்துடன் இணைந்து இப்பணியை மேற்கொண்டது. அந்த வகையில், பசுவிலிருந்து செல்கள் பிரித்தெடுக்கப்பட்டு, அவற்றுக்கு சிறந்த ஊட்டச்சத்துகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து வளர்ச்சி பெற ஏதுவான சூழலில் செல்கள் வைக்கப்பட்டுபெருக்கமடையவைக்கப்பட்டன.இறுதியில் அவை முழுமையான மாமிசமாக உருவாகும் தன்மையை பெற்றன. 3 டி பயோபிரிண்டிங் சொல்யூஷன்ஸ் உருவாக்கிய 3 டி பயோபிரிண்டர் இதில் முக்கிய பங்காற்றியது.இதுகுறித்து தெரிவித்துள்ள, 3 டி பயோபிரிண்டிங் சொல்யூஷன்ஸ், இந்த ஆராய்ச்சி வெற்றிபெற்றுள்ளதால், விண்வெளி பயணங்களின் போது விண்வெளி வீரர்களுக்கு உணவளிக்க வழிவகை செய்யும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன் பூமியில் நிலவும் உணவு பற்றாக்குறை அபாயத்தை போக்கவும் இதன் மூலம் வழி கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடுள்ளது.


Tags : time ,space , Space, meat
× RELATED சுகாதாரமற்ற முறையில் செயல்படும் இறைச்சி கடையை அகற்ற வேண்டும்