சில்லி பாயின்ட்...

* தென் ஆப்ரிக்காவுடன் நடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் கைப்பற்றி அசத்திய இந்திய சுழல் ஆர்.அஷ்வின், டெஸ்ட் போட்டிக்கான ஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் டாப் 10ல் இடம் பிடித்துள்ளார். 2 இன்னிங்சிலும் சதம் விளாசி சாதனை படைத்த ரோகித் ஷர்மா 36 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 17வது இடத்தை பிடித்துள்ளார்.
* பயிற்சியின்போது காயம் அடைந்ததால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நட்சத்திரம் ஸ்மிரிதி மந்தனா தென் ஆப்ரிக்க அணியுடன் நடக்க உள்ள ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் பூஜா வஸ்த்ராகர் (20 வயது) சேர்க்கப்பட்டுள்ளார்.
* விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சி பிரிவில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளைப் பதிவு செய்து அசத்தியுள்ள தமிழக அணி, 7வது லீக் ஆட்டத்தில் இன்று ரயில்வேஸ் அணியின் சவாலை சந்திக்கிறது. இப்போட்டி ஜெய்பூரில் காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது.Tags : innings ,Test ,South Africa , South Africa, First Test, 7 wickets
× RELATED சில்லி பாய்ண்ட்...