ஆடுகளம் பற்றி கவலையில்லை...பயிற்சியாளர் பரத் சொல்கிறார்

புனே: இந்திய அணி பந்துவீச்சாளர்கள் எத்தகைய சவாலுக்கும் தயாராக இருப்பதால் ஆடுகளத்தின் தன்மை பற்றி கவலைப்படுவதில்லை என்று பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறியுள்ளார்.இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் அபாரமாக வென்ற இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் புனேவில் நாளை தொடங்குகிறது இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், செய்தியாளர்களிடம் நேற்று பேசிய இந்திய அணி பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறியதாவது: ஆடுகளம் எப்படி இருக்க வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் கேட்டுக் கொண்டதில்லை. உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக விளங்க விரும்புகிறோம்.

எனவே, எந்தவிதமான ஆடுகளம் அமைக்கப்பட்டாலும் அதற்கு ஏற்ப பந்துவீச எங்கள் வீரர்கள் தயாராக உள்ளனர். இதனால் ‘பிட்ச்’ பற்றிய கவலையே இல்லாமல் போய்விட்டது. வெளிநாடுகளில் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்படும்போது, இந்திய வீரர்கள் பவுன்சர்களை எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும் என்று அட்வைஸ் செய்பவர்கள், இங்கு சுழலுக்கு சாதகமான பிட்ச் போட்டால் புலம்புகிறார்கள். இப்போதுள்ள நிலையில் நாங்கள் ஆடுகளத்தை பற்றி கவலைப்படுவதை விட, பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்தவே விரும்புகிறோம்.

Tags : Coach ,Bharat , Pitch, coach Bharat
× RELATED திருச்சியில் பயிற்சியாளர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை