மணிரத்னம் உள்ளிட்டோர் மீது வழக்கை தள்ளுபடி செய்ய பிரதமருக்கு கமல் வேண்டுகோள்

சென்னை: திரையுலகினர் மீது தொடரப்பட்ட தேச துரோக வழக்கை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல்ஹாசன் கேட்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் கூறியிருப்பதாவது: பிரதமர், ஒரு ஒற்றுமையான இந்தியாவை விரும்புகிறார். நாடாளுமன்றத்தில்  அவரின் உரைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இந்திய நாடும் அதன் சட்டமும் அதனை  உருவாக்க முனைய வேண்டாமா. பிரதமரின் விருப்பத்திற்கு விரோதமாக, எனது 49  நண்பர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகாரில்  தொடரப்பட்டிருக்கும் இந்த வழக்கை தள்ளுபடி செய்து, நீதியினை நிலைநாட்ட  வேண்டுமென்று இந்திய ஜனநாயகத்தின் குடிமகனாக வேண்டுகிறேன். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: