சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி அன்னை சஞ்சய் நகர், 2வது தெருவை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி (70). அதே பகுதியில் ஐஸ்க்ரீம் மற்றும் தண்ணீர் கேன் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு இரு தினங்களுக்கு முன்பு இரவு அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பொருள் வாங்க வந்துள்ளார். அப்போது சிறுமியிடம் நைசாக பேசிய செந்தூர்பாண்டி கடைக்குள் அழைத்து சென்றுள்ளார். பின்னர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி சிறுமி அழுதாள். இதுகுறித்து சிறுமியின் தாய், மகாகவி பாரதி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த செந்தூர்பாண்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: