புரட்சி பாரதம் கட்சி ஆலோசனை கூட்டம்

புழல்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட புரட்சி பாரதம் கட்சி ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் செங்குன்றத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் முகப்பேர் கண்ணதாசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் செங்குன்றம் பாஸ்கர், ஒன்றிய நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், சென்றபாக்கம் லோகு, செங்குன்றம் கஜா முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாநில நிர்வாகிகள் பூவை முகிலன், தொழுவூர் மாறன், முல்லை பலராமன், மாவட்ட இளைஞரணி தலைவர் கதிர் பார்த்திபன், புழல் ஒன்றிய முன்னாள் தலைவர் ஆட்டோ முருகன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  செந்தில்குமார் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: