சுங்க அதிகாரிகள் இருக்கும்போதே செல்போனில் ‘தில்’லாக பேசியவர் தங்கம் கடத்தலில் சிக்கினார்

* ஒரே நாளில் 6 பேர் கைது

* 87.8 லட்சம் தங்கம் பறிமுதல்
Advertising
Advertising

சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து எமிரேட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு வந்தது. அதில் சென்னையை சேர்ந்தர் ரப்பியா (38) என்ற பெண் துபாய்க்கு சென்றுவிட்டு திரும்பினார். அவரது உடமைகளை சோதனையிட்டதில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து சுங்க அதிகாரிகள் ரபீயாவை வெளியில் அனுப்ப முயன்றனர். அப்போது, வந்த ஒரு செல்போன் அழைப்புக்கு  பதில் அளித்த ரப்பியா, ‘‘சோதனையெல்லாம் முடிந்துவிட்டது. வெளியில் வரப்போகிறேன். எந்த பிரச்னையும் இல்லை’ என்றார். அவரது அலட்சியமான பேச்சில் அதிகாரிகளுக்கு மீண்டும் சந்தேகம் ஏற்பட்டது. ரப்பியாவை மீண்டும் அழைத்து அவர் வைத்திருந்த சூட்கேசை உடைத்து பார்த்தனர். அதில் 4 நான்கு தங்க கம்பிகள் இருந்தன. அதன் மொத்த எடை 595 கிராம். சர்வதேச மதிப்பு 22.5 லட்சம். அவற்றை பறிமுதல் செய்து ரப்பியாவை கைது செய்தனர். மேலும், நேற்று அதிகாலை 2.20 மணிக்கு ரியாத்தில் இருந்து ஏர் அரேபியன் ஏர்லைன்சில் சென்னை வந்த ஹரித்துவாரை சேர்ந்த தமீரா (32) சோதனையிட்டனர். அவர் வைத்திருந்த ஒரு எமர்ஜென்ஸி லைட்டில் பேட்டரி வைக்கும் இடத்தில் மூன்று தங்க கட்டிகள்  இருந்தது. அதன் எடை 300 கிராம். சர்வதேச மதிப்பு  11.89 லட்சம்.

இதேபோல, நேற்று அதிகாலை 4.30 மணிக்கு துபாயில் இருந்து மஸ்கட் வழியாக சென்னைக்கு ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் சேலத்தை சேர்ந்த சிவச்சந்திரன் (32), திருவள்ளூரை சேர்ந்த ஷேக் முகமது (37), ராமநாதபுரத்தை சேர்ந்த நயினா முகமது (22), ரகமத் அலி (25) ஆகிய 4 பேர் ஒரு குழுவாக  துபாய்க்கு சுற்றுலா பயணிகள் விசாவில் சென்றுவிட்டு திரும்பினர். அவர்கள் தங்கள் உள்ளாடையில் தங்ககட்டிகள் மறைத்து வைந்திருந்தது தெரியவந்தது. அதன் மொத்த எடை 1 கிலோ 350 கிராம். சர்வதேச மதிப்பு ₹53.5 லட்சம்.  இதையடுத்து 4 பேரையும் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் கடத்தி வரப்பட்ட 87.8 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பெண் பயணி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: