இடைத்தேர்தலில் மேலும் 2 கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு

சென்னை: இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மேலும் 2 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் தலைவர் பொன்.குமார் நேரில் சந்தித்து நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தார், இதேபோல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சமாஜ்வாடி கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் இளங்கோ யாதவ் நேரில் சந்தித்து இடைத்தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: