சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் பார்க்க வந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்: குடும்பத்தார் மூலம் ப.சிதம்பரம் ட்விட்

டெல்லி: சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் பார்க்க வந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன் என குடும்பத்தார் மூலம் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ காவல் முடிந்ததை அடுத்து அவர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று சிதம்பரத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திகார்  சிறைசாலைக்கு சென்று சந்தித்தனர். இதனிடையே தனது குடும்பத்தினர் மூலமாக, டிவிட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் சில தகவல்களை பதிவிட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் கூறுவதாவது; சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் பார்க்க வந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்; காங்கிரஸ் வலுவாக இருக்கும் வரை நானும் பலமாகவும் தைரியமாகவும் இருப்பேன்.

வேலைவாய்ப்பின்மை, வேலையிழப்பு, குறைந்த சம்பளம், வன்முறை  தாக்குதல், காஷ்மீரில் ஊரடங்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது தவிர நாட்டில் அனைத்தும் நன்றாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

Related Stories: