×

ஏர்போர்ட் ஹோட்டல்

நன்றி குங்குமம் முத்தாரம்

நியூயார்க்கில் உள்ள ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் வீற்றிருக்கிறது டிடபிள்யூஏ ஹோட்டல். விமானத்தின் இறக்கைகளைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஹோட்டலில் 512 சொகுசு அறைகள், 6 உணவகங்கள், 50 ஆயிரம் சதுர அடியில் மீட்டிங் ஹால் என ஏகப்பட்ட வசதிகள். இதுபோக உலகிலேயே மிகப்பெரிய ஹோட்டல் ஜிம் இங்குதான் உள்ளது.

அதன் பரப்பளவு 10 ஆயிரம் சதுர அடிகள். ஹோட்டல் அறையின் சுவர்களை 4.5 இன்ச் தடிமன் உள்ள கண்ணாடியால் உருவாக்கியிருக்கின்றனர். அதனால் ஏர்போர்ட்டுக்குள்ளேயே இருந்தாலும் வெளியே நடக்கும் எந்த சத்தமும் உள்ளே கேட்காது. ‘‘எந்த சத்தமும் கேட்காமல் வான்வெளி பயண அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்...’’ என்கிறார் ஹோட்டலின் நிர்வாக இயக்குனரான எரிக்.


Tags : Airport Hotel , New York, Airport, DWA Hotel, John F. Kennedy
× RELATED நியூயார்க்கில் ஏர்போர்ட் ஹோட்டல் : 512...