×

குக் தீவுகள்

நன்றி குங்குமம் முத்தாரம்

தென் பசிபிக் பெருங்கடலில் ஒய்யாரமாக வீற்றிருக்கின்றன குக் தீவுகள். 15 தீவுகளை உள்ளடக்கிய இந்த தீவுக்கூட்டம் 240 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. சுமார் 18 ஆயிரம் பேர் மட்டுமே இங்கே வசிக்கிறார்கள். ஆனால், வருடந் தோறும் இரண்டு லட்சம் சுற்றுலாப் பயணிகள் குக் தீவுகளைச் சுற்றிப்பார்க்க வருகின்றனர்.

இதன் பாதுகாப்பு, வெளியுறவு போன்றவை நியூசிலாந்தின் பொறுப்பில் இருந்தாலும் குக் தீவுகள் தனித்து இயங்குகின்றன. சுற்றுலா மட்டுமே முக்கிய வருமானம் என்பதால் அதை மேம்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகிறது குக் தீவுகள்.


Tags : Cook Islands , Cook, Islands, Pacific, 240 sq. Km
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்