×

மின்கசிவால் ஏற்படும் உயிர் பலிகளை தடுக்க அரசு புதைவட மின்கம்பி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: சுய விளம்பரம் செய்து கொள்வதை அ.தி.மு.க. அமைச்சர்கள் கைவிட வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில்  மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். கொளத்தூர், ஜவஹர் நகர் பகுதியில் உள்ள எட்டு பூங்காக்களுக்கு மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

பல்லவன் சாலை பகுதியில் உள்ள மருத்துவமனையில் இரண்டரை இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றை பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், கொளத்தூர்  தொகுதியில் அடிக்கடி மின்கசிவு ஏற்படுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று குறிப்பிட்டார். மின்கசிவால் ஏற்படும் உயிர் பலிகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் புதைவட மின்கம்பி பதிப்பு பணிகளை  விரைந்து முடிக்கவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். சேலத்தில் அ.தி.மு.க. அமைச்சர்களின் வருகைக்காக காக்க வைக்கப்பட்டதில் முதியவர் மணி உயிரிழந்தது வேதனையான செயல் என்றும் சுய விளம்பரம் செய்து கொள்வதை அ.தி.மு.க. அமைச்சர்கள் கைவிட வேண்டும் என்றும்   தெரிவித்தார்.


Tags : Government ,fossil-wiring workshop ,deaths ,MG Stalin , The government should expeditiously complete the fossil-wiring workshop to prevent the deaths caused by mudslides:
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...