வரிச்சலுகைகள் எதிரொலியாக இன்றும் ஏற்றத்தில் தொடங்கிய வர்த்தகம்: சென்செஸ்ஸ் 978 புள்ளிகள் உயர்ந்தது

மும்பை: பங்குசந்தைகளில் வர்த்தகம் துவங்கிய உடனேயே சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை தொடங்கியவுடன் சென்செக்ஸ் 1,072 புள்ளிகள் உயர்ந்து 39,086 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 280 புள்ளிகள் உயர்ந்து 11,555 புள்ளிகளில் தொடங்கியது. உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரிவிகிதங்கள் குறைப்பு அறிவிப்பின் எதிரொலியாக இன்றும் பங்குசந்தைகளில் எழுச்சி காணப்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிகிழமை அன்று பங்குசந்தைகளில் காணப்பட்ட எழுச்சி இன்றும் நீடிக்கிறது. அதன்பிறகு, மும்பை பங்குச்சந்தை 978 புள்ளிகள் கொண்டு 38,993ல் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 291 புள்ளிகள் உயர்ந்து 11,565 புள்ளிகளில் வணிகம் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில், வரிச்சலுகையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தை திடீரென ஏற்றம் கண்டது. அன்று காலையில் சரிவுடன் தொடங்கிய வர்த்தகம், நிதி அமைச்சரின் வரிச்சலுகை அறிவிப்பால், திடீரென ஏற்றம் கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் வரை உயர்ந்து 38 ஆயிரத்து 143க்கு வர்த்தகம் ஆனது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் 600 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 315க்கு வர்த்தகம் ஆனது. இதனால் பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. பங்குச்சந்தையில் திடீரென ஏற்பட்ட அதிரடி மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த பொருளாதார நிபுணர் ஷியாம் சேகர், இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், வரிசலுகையின் எதிரொலியாக பங்குசந்தையில் இன்றும் ஏற்றம் காணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 217 புள்ளிகள் குறைந்து 38,776 ல் வர்த்தகமாகி வருகிறது.

Related Stories: