825 மின்சார பேருந்துகள் இன்னும் ஓராண்டுக்குள் தமிழகத்தில் அறிமுகம்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தகவல்

சேலம்: இந்திய அளவில் தமிழகத்தில் தான் பெரிய அளவில் பொதுப் போக்குவரத்து சேவை அரசால் வழங்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துளளார். சேலத்தில் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு  பெற்றவர்களுக்கு பணப் பயன் வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஆயிரத்து 93 கோடி ரூபாய் பணப் பயன் ஒரே  தவணையாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு ஒரு கோடியே 25 லட்சம் பயணிகள் பயன் பெற்று வருவதாகவும் இந்திய அளவில் தமிழகத்தில் தான் பெரிய அளவில் பொதுப் போக்குவரத்து சேவை அரசால் வழங்கப்படுவதாகவும் அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கப் குறிப்பிட்டார்.

300 புதிய மின்சாரப் பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் இன்னும் இரண்டொரு நாட்களில் கையெழுத்து இடப்பட உள்ளது என்றும் 825 மின்சார பேருந்துகள் இன்னும் ஓராண்டுக்குள் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் அமைச்சர்  குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அன்பழகன், சரோஜா மற்றும் சேலம் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

Related Stories: