×

விக்கிறபாண்டியா, வாங்கறபாண்டியா?: அமைச்சரை திணறடித்த தொகுதி பெயர்

ஒட்டன்சத்திரம்,: ஒட்டன்சத்திரத்தில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ‘இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியின் பெயர் விக்கிறபாண்டியா? வாங்கறபாண்டியா’ என  திணறியதால் சலசலப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்கல் சீனிவாசன் பேசும்போது, ‘‘தற்போது இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்  அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வேலூர் தொகுதியில் சொற்ப வாக்குகளில் நெருங்கிவந்த வெற்றியை இழந்தது போல இல்லாமல் இந்தமுறை 2 தொகுதிகளிலும் அதிமுக தொண்டர்கள் தீவிர முயற்சி செய்ய வேண்டும்’’ என்றார்.அவர் விக்கிரவாண்டி தொகுதி குறித்து பேசும்போது, ‘‘விக்கிறபாண்டியா இல்ல, வாங்கறபாண்டியா? என்னப்பா ஊர் இது? வாயிலேயே வரமாட்டேங்குது...’’ என்று தடுமாறினார். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Tags : Vangarapandiya , Vikkirapantiya, Vangarapandiya, module, troubled , Minister
× RELATED 2019-20-க்கான எம்.பி.க்களின் தொகுதி...