நீர்வரத்து 7,812 கனஅடி சரிகிறது மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று முன்தினம், விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை  9  ஆயிரம் கனஅடியாக சரிந்தது. எனினும் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்கும் தடை நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து சரிந்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் 9 ஆயிரம் கனஅடியாக  இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 7,812 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடி  திறக்கப்படுகிறது. வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் கடந்த 15 நாட்களுக்கு பின், 120 அடியில் இருந்து குறைந்து நேற்று 119.94 அடியானது. நீர் இருப்பு 93.37 டிஎம்சி

Related Stories: