நாங்குநேரி இடைத்தேர்தல் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

நாங்குநேரி, :  நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலையொட்டி, நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில், சிறப்பு தேர்தல் கட்டுப்பாட்டு அறை நேற்று திறக்கப்பட்டது. இதனை 1950 என்ற இலவச தொலைபேசி மூலம் தொடர்பு  கொள்ளலாம். தேர்தல் தொடர்பான புகார்களை இதில் தெரிவிக்கலாம். இங்கு பெறப்படும் புகார்கள் மற்றும் தகவல்கள் உடனுக்குடன் மாவட்டம் முழுவதும் உள்ள பறக்கும் படையினருக்கு தெரிவிக்கப்படும். இங்கு குறைந்தபட்சம் 3 பேர், 24  மணி நேரம் பணியில் இருப்பர்.தேர்தல் அலுவலர் நடேசன் கூறுகையில், ‘‘23ம்தேதி (இன்று) முதல் 30ம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே  அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்’’ என்றார்.  கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில்,  கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பேசுகையில், அரசியல் கட்சியினர் பிளாஸ்டிக் கொடி, பிளாஸ்டிக் சின்னத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க அரசியல் கட்சிகள் டோக்கன் எதுவும் கொடுக்கக் கூடாது’ என்றார்.

Related Stories: