×

பெற்றோர்களை இயந்திரமயமாக்கி விடும்: அபிலாஷா, சைக்காலஜிஸ்ட் டாக்டர்

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது அவசியம் இல்லை இது தேவையில்லாமல் மனஅழுத்தம் தான். அந்த வயதில் அவர்கள் அனைத்திலும் டெவலப் பண்ண வேண்டும்.  படிப்பில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது.  ஓட்ட பந்தயத்தில் ஓடவிட்டால்  முதலில் நான் ஓட வேண்டும் என்ற எண்ணம் வரும்.  இப்போது 10,12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியும். அதை மாதிரி 5,8 ம் வகுப்பு அப்படியே பெற்றோர்கள் ஆகிவிடுவார்கள். அவர்களின் வாழ்க்கையே இயந்திரமயமாகி விடும். படிப்பு எல்லாம்  கொஞ்சம் தாமதமாக தான் வரும். அதாவது, நிறைய பேருக்கு 9,10ம் வகுப்புகளில் தான் படிக்கணும் என்ற எண்ணம் வரும். அது வரை விளையாட்டுத்தனமாக இருப்பார்கள் அதற்கு அப்புறம் படிப்பார்கள். ஆனால் 5,8ம் வகுப்புகளில் நன்றாக  படிக்க மாட்டார்கள் என்று முத்திரை குத்திவிட்டால் அவர்களை மாற்றுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் போய்விடும். மாணவர்கள் தன்னம்பிக்கை போய்விடும். இது மாணவர்களுக்கு எந்த வகையில் வாழ்க்கைக்கு மாற்றம் கொடுக்கும் என்று தெரியவில்லை. ெசயல்முறை அறிவு வேண்டும் என்று அவர்களுடைய பெற்றோர்களுக்கு கொடுக்கிறார்கள். மாணவர்களுக்கு அழகியல், பெயிண்டிங் மற்றும்  கிரியேட்டிவ் அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல் புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் பண்ணி பேப்பரில் அப்படியே எழுத வேண்டும். அதிலும் செய்முறை பயிற்சி கொடுக்கிறார்கள். அதுவும் இப்போது பெற்றோர்கள் தான் செய்கின்றனர்.  இப்போது அதற்கும் கடைகள் உள்ளது.

விளையாட்டு, இலக்கியம், டான்ஸ் போன்றவைக்கு மதிப்பெண் கொடுக்கலாம். மாணவர்களுக்கு என்ன வருகிறதோ அதை கற்றுக்கொள் என்று கூறலாம். அனைவரும், டாக்டர் ஆகனும் என்கிறபோது தான் போட்டி அதிகமாகிறது. 100 பேரும்  நல்ல மதிப்பெண் வாங்கனும், டாக்டர் ஆகனும் என்கிறபோது அனைவரும் நல்ல டாக்டராக இருக்க முடியாது. ஆனால் 50 பேர் வெவ்வேறு துறைகளில் சென்றிருந்தால் அந்தந்த துறைகளில் நல்ல நிலைக்கு வந்திருப்பார்கள்.  முதலில் இருந்து  என்ன படிக்க வேண்டும் என்பதை அவர்களை தேர்வு செய்து கொடுத்திருக்கும் வாய்ப்பை தர வேண்டும். ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை படித்து சொல்லிவிட்டால் நாம் வெற்றி பெறமுடியும். மனப்பாடம் பண்ணி எழுதுவது மட்டும் படிப்பு இல்லை. 5,8ம் வகுப்புகளுக்கு மட்டும் தேர்வு வைத்தால் மற்ற படிப்புகள் எல்லாம் விளையாடுவதற்கா?. தற்போது 11ம் வகுப்புகளில் பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்களை நடத்துவது போல் அடுத்து 7ம் வகுப்புகளில் 8ம் வகுப்பிற்கான பாடங்களை நடத்த ஆரம்பித்து விடுவார்கள். இது வந்து தேவையில்லாமல் மாணவர்கள், பெற்றோர்களுக்கு  அழுத்தம் தான். இன்னும் இரண்டு பொதுத்தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் அந்த தேர்வுக்கு ஆசிரியர் நியமிக்க வேண்டும், பேப்பர் திருத்த வேண்டும் இது அவசியம் இல்லாதது.

5,8ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது தேவையில்லை. அதில் பெரிதாக  எந்த பயன்களும் இல்லை. ஆனால் மற்ற நாடுகளில் பாடத்திட்டத்தில் இல்லாத கூடுதல் திறன்களை மேம்படுத்துவதில் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.  நம்முடைய நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு சரியான அணுகுமுறை, பயிற்சி இல்லாததால் தான் பின்தங்கி உள்ளனர். ஒரு சில நாடுகளில் கூடுதல் திறன்களை மேம்படுத்தினால், அதற்கென மதிப்பெண் கொடுக்கின்றனர்.  விளையாட்டு என்பதும் ஒரு வேலை தான் யாருக்கு வருகிறதோ, அவர்கள் அதில் திறன்களை மேம்படுத்தி வெற்றி பெறலாம். அதுவும் நாட்டிற்கும் ெபருமை தான்.பிளஸ்2 பாடங்களை நடத்துவது போல் அடுத்து 8ம் வகுப்பிற்கான பாடங்களை 7ம் வகுப்புகளில் நடத்த ஆரம்பித்து விடுவார்கள். இது வந்து தேவையில்லாமல் மாணவர்கள், பெற்றோர்களுக்கு அழுத்தம் தான்.



Tags : Parents ,Psychologist ,Abhilasha , Parents, Mechanized, Abhilasha, Psychologist ,Dr.
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்