கோயில்களில் இருந்து சேகரிக்கப்படும் மாலைகள், பூக்கள் கழிவில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பு

* ஒரு பாக்கெட் 25க்கு விற்பனை

* முன்மாதிரியாக கபாலீஸ்வரர் கோயிலில் அறிமுகம்

சென்னை:கோயில்களில் இருந்து சேகரிக்கப்படும் மாலைகள், பூக்களின் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்து ஒரு பாக்கெட் 25க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திட்டத்தை முன்மாதிரியாக கபாலீஸ்வரர் கோயிலில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் இருந்து சேகரிக்கப்படும் மாலைகள் மற்றும் பூக்களின் கழிவுகள், உணவு கழிவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவு பொருட்கள்  குப்பைகளில் கொட்டப்பட்டுவருகிறது. இந்த நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாத்திட சேகரிக்கப்படும் மாலைகள் மற்றும் பூக்களின் கழிவில் இருந்து திடக்கழிவு மேலாண்மை முறையில் இயற்கை உரங்கள் மற்றும் எரிபொருள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.முதற்கட்டமாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உணவு கழிவுகள், மாட்டு சாணத்தை கொண்டு பயோகேஸ் எனப்படும் எரிபொருள் தயாரித்து, அதன் மூலம் கோயில் பிரசாதம், அன்னதானத்திற்கு உணவு தயாரிப்பு உள்ளிட்டவற்றிற்காக  பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாலைகள் மற்றும் பூக்களின் கழிவில் இருந்து இயற்கை உரங்களும் தயாரிக்கப்படுகிறது. இந்த இயற்கை உரம் ஒரு பாக்கெட் 25க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த இயற்கை உரங்களை மாடித்தோட்டம் அமைக்கவும், செடி,  கொடிகளை வளர்க்கவும் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த இயற்கை உரம் விற்பனை செய்யும் திட்டம் முன்மாதிரியாக கபாலீஸ்வரர் கோயிலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த திட்டத்தை முக்கிய கோயில்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும், கூறும் போது, ‘மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இயற்கை உரம் விற்பனை செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அதிக வருவாய் உள்ள கோயில்களில் செயல்படுத்த  திட்டமிட்டுள்ளோம்.  தனியார் நிறுவனம் ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்வதால் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். இந்த திட்டத்தை  செயல்படுத்துவது ெதாடர்பாக அறநிலையத்துறை-தனியார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதை தொடர்ந்து விரைவில் இந்த திட்டம் அனைத்து ேகாயில்களிலும் செயல்படுத்தப்படுகிறது’ என்றார்.

Related Stories: