திமுக கூட்டணிக்கு விசிக ஆதரவு

சென்னை: நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில்  காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல்களில் திமுக, காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு விசிக தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.  இந்த மூன்று தொகுதிகளிலும் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு விசிக முழுமையாகப்  பாடுபடும். திமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப்பெறும் என்பது உறுதி.

Tags : DMK Alliance DMK Alliance for Support , Support ,DMK, Alliance
× RELATED ஆதரவு கேட்டு மக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம்