×

இடைத்தேர்தலில் திமுக, காங்கிரசுக்கு ஆதரவு: முத்தரசன் அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திமுக, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் என்று மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டஅறிக்கை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து  விக்கிரவாண்டி தொகுதியில் திமுக, நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ்  கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மதவாத, சாதிவெறி சக்திகளை எதிர்த்து சமரசமின்றி போராடி வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான  இடைத்தேர்தல்களில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்ததது. மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் மகத்தான வெற்றி பெற்றதை நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக  சக்திகள் வரவேற்று பாராட்டியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக வரும் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்ட மன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, பெருவாரியான வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி பெறப் பாடுபடுவது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு முடிவு செய்துள்ளது. விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்து  ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Mutharasan ,Congress ,by-election ,DMK , DMK, Congress ,support ,by-election, Mutharasan
× RELATED சுகாதாரத்துறை குறித்து விசாரணை நடத்த வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்