நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு

* மக்களவை தேர்தல் மூலம் அதிமுக செல்வாக்கு சரிவு * அரசியல் விமர்சகர்கள் கருத்து

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜ்நகர் சட்டமன்ற தொகுதிக்கும் அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய  தலைமை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வசந்தகுமார் வெற்றிப்பெற்றதால், அந்த தொகுதியை மீண்டும்  காங்கிரஸ் கட்சிக்கே திமுக விட்டுக் கொடுத்துள்ளது.

ஆனால் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அதிமுக போட்டியிட முடிவு செய்து உள்ளது. ஆனால் நாங்குநேரி தொகுதியில் பாஜ போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாஜ சார்பில், அதிமுக தரப்புக்கு  அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே அமமுக, மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறிவிட்டது. அதிமுக கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு குறித்து தற்போது வரை கருத்து  ெதரிவிக்கவில்லை. அதே நேரத்தில் 2 தொகுதிகளிலும் ேபாட்டியிடும் அதிமுகவினரிடம் விருப்பமனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார் அவர், இந்த தொகுதியில் 74,942 பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் விஜயகுமார் 57,617  வாக்குகள் பெற்றிருந்தார். தேமுதிக 9,446 வாக்குகளும், பாஜக 6,609 வாக்குகளும், பாமக 600 வாக்குகளும் பெற்றிருந்தன.இந்த நிலையில் அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாஜக, பாமக கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த கூட்டணி திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாங்குநேரி தொகுதியில் 57,617  வாக்குகள் பெற்றது. திமுக தலைமையிலான கூட்டணி 86,306 வாக்குகள் பெற்றிருந்தது.கடந்த 2016ம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ராதாமணி 63,757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அதிமுக 56,845 வாக்குகள், பாமக 41,428, தேமுதிக 9,981ம், பாஜக 1291 வாக்குகள்  பெற்றிருந்தன.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக கூட்டணி 83,432ம், அதிமுக கூட்டணி 74,819 வாக்குகள் பெற்றது. இந்த இரண்டு தொகுதிகளிலும் கடந்த 2016 சட்டசபை தேர்தலை காட்டிலும்  நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றுள்ளது. அதே நேரத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு இந்த 2 தொகுதிகளிலும் கணிசமான வாக்குகள் சரிந்து இருப்பது நடந்து முடிந்த தேர்தல் மூலம்  நிரூபணமாகியுள்ளது. எனவே, வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டாலும், திமுக கூட்டணிக்கு தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அமமுக, மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடவில்லை என கூறிவிட்டது. அதிமுக கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு குறித்து தற்போது வரை கருத்து ெதரிவிக்கவில்லை.

Related Stories: