×

காலாவதியான பாலிசியை மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு

புதுடெல்லி: காலாவதியான பாலிசியை புதுப்பிக்க சிறப்பு முகாமை எல்ஐசி அறிவித்துள்ளது. பாலிசி எடுத்தவர்கள் பலர், பாதியிலேயே கட்டாமல் விட்டு விடுகின்றனர். இவ்வாறு பாலிசியை கட்ட தவறியிருந்தால் குறிப்பிட்ட காலத்துக்குள் அபராதத்துடன் கட்டவும், காலாவதி ஆகியிருந்தால் அவற்றை புதுப்பிக்கவும் சில காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிக்கின்றன.

அந்த வகையில், காலாவதியான பாலிசிக்களை புதுப்பிக்க எல்ஐசி சிறப்பு முகாம் நடத்தி வருகிறது. கடந்த 16ம் தேதி தொடங்கிய இந்த முகாம் அடுத்த மாதம் 15ம் தேதி வரை நடக்கிறது. இதில், பாக்கி பிரீமியம் தொகையை செலுத்தி பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம். காலதாமத கட்டண தொகையில் தள்ளுபடிகளும் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள எல்ஐசி அலுவலகங்கள் அல்லது வாடிக்கையாளர் மையத்தை அணுகலாம் என எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : Chance,renew , expired policy
× RELATED இந்திய தேசிய வருமானத்தில் நிலவும்...