சில்லி பாயின்ட்...

* முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன. தாக்காவில் நடைபெற உள்ள இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.00 மணிக்கு தொடங்குகிறது. லீக் சுற்றில் வங்கதேசம் (6 புள்ளி), ஆப்கானிஸ்தான் (4 புள்ளி) முதல் 2 இடங்களைப் பிடித்து பைனலுக்கு முன்னேறின. ஜிம்பாப்வே (2 புள்ளி) கடைசி இடம் பிடித்து வெளியேறியது.

* கிரிக்கெட் நட்சத்திரம் எம்.எஸ்.டோனி ராணுவத்தில் தனது பயிற்சி/சேவையை முடித்துக் கொண்டு ஓய்வெடுத்து வருகிறார். அவர் வரும் நவம்பர் மாதம் வரை இந்திய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. விஜய் ஹசாரே டிராபி மற்றும் வங்கதேச அணியுடனான டி20 தொடரில் விளையாடாத டோனி, டிசம்பரில் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

* கஜகஸ்தானில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 61 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் ராகுல் ஆவாரே வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த தொடரில் இந்திய அணி 4 வெண்கலம், 1 வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

* லேவர் கோப்பை டென்னிஸ் தொடரில் ஐரோப்பிய அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்), கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

* கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் மகளிர் அணியுடன் நடந்த பயிற்சி டி20 போட்டியில் தென் ஆப்ரிக்க மகளிர் அணி 83 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 174/5. வாரியத் தலைவர் லெவன் 20 ஓவரில் 91 ரன்னுக்கு ஆல் அவுட். இந்தியா - தென் ஆப்ரிக்கா மகளிர் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி சூரத்தில் நாளை நடைபெறுகிறது.

Related Stories: