நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.81 லட்சம் மதிப்புள்ள அரிய குரங்குகள் பறிமுதல்: அமலாக்கத் துறை நடவடிக்கை

கொல்கத்தா: மனித குரங்குகள் உட்பட அரிய வகை குரங்குகளை, வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக கொண்டு வந்த கொல்கத்தா நபரிடம் ₹81 லட்சம் மதிப்புள்ள 3 மனித குரங்குகள், 4 தென் அமெரிக்க குரங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சுப்ரதிப் குஹா. இவரிடம் 3 மனித குரங்குகள், 4 தென் அமெரிக்க குரங்குகள் இருந்தன. இவர் மீது மேற்கு வங்க வனத்துறை, அமலாக்கத்துறையிடம் புகார் கொடுத்தது. இதையடுத்து நடந்த விசாரணையில் சுப்ரதிப் குஹா வன விலங்குகளை கடத்தும் தொழிலில் ஈடுபட்டது கண்டறிப்பட்டது.

இதற்காக இவர் வனத்துறையின் போலி அனுமதி கடிதங்களை சுங்க அதிகாரிகளிடம் வழங்கி ஏமாற்றியுள்ளார். மனித குரங்குகள் மூன்றும் இந்தியாவில் பிறந்தவை எனவும் போலி ஆவணம் தயாரித்துள்ளார். இவர் மீது நிதிமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த அமலாக்கத் துறை, 3 மனித குரங்குகள், 4 தென் அமெரிக்க குரங்குகளை பறிமுதல் செய்தது. இவற்றின் மதிப்பு ₹81 லட்சம். பறிமுதல் செய்யப்பட்ட குரங்குகள் அலிப்பூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  

Related Stories: