வெள்ளத்தில் டிக்டாக் வாலிபர் பரிதாப சாவு

திருமலை: தெலங்கானா அருகே கோப்புல தடுப்பணையில் நின்று கொண்டு ‘டிக்டாக்’ வீடியோ பதிவு செய்த வாலிபர் நீரில் அடித்து செல்லப்பட்டார். 2 நாட்களுக்கு பிறகு அவரது சடலம் மீட்கப்பட்டது. தெலங்கானாவின் பிணகல்  மண்டலம் கோனு கோப்பு என்ற இடத்தில் கோப்புல தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் கடந்த 20ம் தேதி நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்த தினேஷ்(28) மற்றும் அவரது நண்பர் இருவரும் நீரில் நின்றுக்கொண்டு ஆடி பாடியபடி ‘டிக்டாக்’ வீடியோ எடுத்துக்கொண்டனர்.

அப்போது, திடீரென நீரின் வேகம் அதிகரித்ததால் கால் தவறி கீழே விழுந்த தினேஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். உடனிருந்த அவரது நண்பர் உடனடியாக உறவினர்கள் மற்றும் நிஜாமாபாத் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடந்த 2 நாட்களாக நீரில் அடித்து செல்லப்பட்ட தினேஷை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அவரை சடலமாக மீட்டனர்.

Related Stories: