அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 'ஹவுடி மோடி'நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரை

ஹூஸ்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் மோடி நலமா என்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திரண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை பார்க்கவும் அவரது பேச்சைக் கேட்கவும் ஆவலுடன் வந்துள்ளதாக அரங்கில் திரண்டுள்ளதாக பேட்டியளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஹூஸ்டனில் உள்ள என்.ஆர்.ஜி மைதானத்திற்கு வந்தடைந்தார். ஹூஸ்டன் நகரில் நடைபெறும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் உரையை கேட்பதற்காக அதிகளவிலான மக்கள் குவிந்து வருகின்றனர்.

ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை

அமெரிக்கா: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெறும் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு சிறந்த மனிதர் என்று மோடி புகழாரம் செய்து வருகிறார். வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடியவர் டிரம்ப் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியவர் டிரம்ப் எனவும் தெரிவித்தார். உற்சாகத்துடனும், துடிப்புடனும், ஆளுமையுடனும் செயல் படக்கூடியவர் டிரம்ப் என பிரதமர் மோடி கூறினார். அமெரிக்கா நாட்டிற்காகவும், உலகத்திற்காகவும் நிறைய விஷயங்களை செய்து வருகிறார் என கூறினார். எளிதாக அணுகக்கூடிய அதிபராக டிரம்ப் இருக்கிறார், எப்போதும் அன்புடனும், நட்புடனும் பழகுகிறார் என தெரிவித்தார்.

ஹவுடி மோடி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரை

அமெரிக்கா: மோடியின் செயல் திட்டத்ததால் கோடிக்கனக்கான மக்கள் பலன் பெற்றுள்ளனர் என ஹவுடி மோடி நிகழ்ச்சியில் டிரம்ப் புகழாரம் செய்துள்ளார். இந்திய அமெரிக்க மருத்துவர்கள் அமெரிக்காவின் வனர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர் எனவும் டிரம்ப் தெரிவித்தார். விண்வெளித்துறையில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார். இரு நாடுகளும் அளப்பரிய வளர்ச்சியைப் பெற மோடியுடன் இணைந்து செயல்படுவேன் என்றார். தீவிரவாதத்தை ஒழிக்க இந்திய மற்றும் அமெரிக்க ராணுவங்கள் இணைந்து செயல்படும் எனவும் கூறினார். இந்தியாவில் நடக்கும் என்பிஏ கூடைபந்து போட்டிகளை நேரில் வந்து பார்ப்பேன் எனவும் தெரிவித்தார். மோடியின் தலைமையில் இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்துள்ளது, பல துறைகளில் முன்னேறியுள்ளது எனவும் கூறினார். இந்தியாவில் 30 கோடி மக்களின் வறுமையை போக்கியுள்ளார் மோடி என தெரிவித்தார். இந்தியர்கள் அமெரிக்காவில் வாழ்வதில் அமெரிக்கா பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறது என தெரிவித்தார். அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை கடந்த 51 வருடங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது என கூறினார். நேர்மையான நண்பரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார். இந்தியாவின் பிரதமர் மோடியுடன் இந்த விழாவில் பங்கேற்பதில் பெருமை அடைகிறேன் என கூறினார். ஒவ்வொரு பிரச்சினையையும் வலிமையாக எதிர்கொள்ளும் பிரதமராக மோடி இருக்கிறார் என கூறினார்.

Related Stories: