மழைக்காலங்களில் தண்ணீரில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?.. தீயணைப்பு துறை செயல்விளக்கம்

பழநி: மழைக்கால ஆபத்துகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்து பழநி அருகே பாலசமுத்திரத்தில் தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம் அளித்தனர். தமிழகத்தில் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஐப்பசி மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கும். அப்போது பரவலாக மழை பெய்யும். இதுபோன்ற மழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள பல இடங்கள் நீரினால் சூழப்படும். இதுபோன்ற ஆபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பழநி அருகே பாலசமுத்திரம் செம்மாட்டுப்பாறை குளத்தில் தீயணைப்புத் துறையினரால் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

தீயணைப்பு நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் நடந்த செயல்முறை விளக்கத்தில் தண்ணீரில் சிக்கியவர்களை காப்பாற்றும் முறை, கயிறு கட்டி மீட்கும் முறை, கால்நடைகளை காப்பாற்றும் முறை, தண்ணீரில் விழுந்தவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி சிகிச்சை முறை உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. மழைக்காலங்களில் மின் இணைப்புகளில் மின்கசிவு ஏற்பட்டால் நடந்து கொள்ளும் விதம், விஷப்பூச்சிகளை கண்டறியும் விதம், அவற்றை அப்புறப்படுத்தும் முறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

Related Stories: