×

அல்பேனியா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு... 68 பேர் படுகாயம்

டிரானா: அல்பேனியா நாட்டில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தலைநகர் டிரனா மற்றும் கடற்கரை நகரமான டுர்ரஸ் ஆகிய இடங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தொடர் நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் சேதமாகின. நிலநடுக்கத்தை உணர்ந்து வீடுகளை விட்டு வெளியே வந்த பொதுமக்கள் , நிலநடுக்கம் தொடர்ந்ததாக தெரிவித்தனர்.

சில இடங்களில் வீடுகள் சேதம் அடைந்தன. பொருட்கள் மேல விழுந்ததில் சில பேருக்கு காயம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தில் சிக்கி 68 பேர் படுகாயம் அடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அல்பேனியா நாட்டின் வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளில் நேரிட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Tags : earthquake ,The Richter scale ,Albania , Albania, earthquake
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்