×

மொழியைக் காக்க ஆட்சியை மட்டுமல்ல; உயிரைத் தரவும் தயாராக இருந்தவர் கலைஞர்: ஸ்டாலின் பேச்சு

ஈரோடு: ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி  சிலையை திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.திமுக., தலைவராக இருந்த கருணாநிதி மறைவிற்கு பிறகு சென்னை அண்ணா  அறிவாலயத்தில் கருணாநிதிக்கு முதன்முறையாக சிலை திறக்கப்பட்டது. இதையடுத்து  ஈரோடு முனிசிபல் காலனியில் சிலை திறக்கப்பட்டது.

தற்போது  ஈரோட்டில் 2வது  சிலையாக பன்னீர்செல்வம் பார்க்கில் முழு உருவ வெண்கலச்சிலை நிறுவப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்று வருகிறது. விழாவில் கலந்து கொள்ளும் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர்; மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின் கலைஞரின் சிலையை பன்னீர்செல்வம் பூங்காவில் திறந்துள்ளோம். நீதிமன்ற அனுமதி பெற்று தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும். இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை எதிர்த்தவர் கருணாநிதி.

இந்திரா காந்தி தூதர்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து ஆட்சியை பறி கொடுத்தவர் கருணாநிதி. தமிழகத்துக்காக பல தியாகங்களை செய்தவர் கருணாநிதி. கருணாநிதியின் வாழ்க்கையே போராட்டம் தான், பள்ளியிலும் போராடியே சேர்ந்தார். கல்லக்குடி என பெயர் மாற்றத்துக்காக போராட்டம் நடத்தியவர் கருணாநிதி. மொழியைக் காக்க ஆட்சியை மட்டுமல்ல; உயிரைத் தரவும் தயாராக இருந்தவர் கலைஞர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.


Tags : Artist ,Stalin ,kalainer ,speech , Language, kalainer , Stalin
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...