கோவை மாவட்டம் சூலூர் அருகே பவுண்டேசன் சார்பாக ஒரே நேரத்தில் 3600 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே வனம் பவுண்டேசன் சார்பாக ஒரே நேரத்தில் மூவாயிரத்து அறுநூறு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பநாயக்கன்பட்டி அருகே தாத்தன்குட்டை பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் சூலூர் எம்எல்ஏ கந்தசாமி, கொடீசியா நிறுவனத்தலைவர் வரதராஜன், சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ஷீலா ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர்.

இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆர்வலர்கள் என திரளனோர் கலந்துகொண்டு 3 ஆயிரத்து 600 மரக்கன்றுகளை நட்டனர். மரக்கன்றுகளுக்கு தேவையான தண்ணீரை தனியார் நிறுவனம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த சூலூர் தொகுதி எம்எல்ஏ கந்தசாமி, குடிமராமத்து பணியின் ஒருபகுதியாக சுல்தான்பேட்டைப் பகுதிகளில் உள்ள 8 குளங்களை தூர்வார ரூபாய் ஒரு லட்சம் நிதி ஒதுக்கியுள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.

Related Stories: