×

ஏர் இந்தியாவின் 2 விமானங்களில் அதிக காற்றழுத்த உராய்வு பாதிப்பால் சேதம்: ஊழியர்கள் காயம்

விஜயவாடா: ஏர் இந்தியா நிறுவனத்தின் இரு விமானங்கள் ஏர் டர்புலன்ஸ் எனப்படும் அதிகப்படியான காற்றுழுத்த உராய்வால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடுவானில் விமானம் சென்று கொண்டிருக்கும்போது விமானத்துக்கும், காற்றுக்குமான உராய்வு சீராக இருக்கும் வரை பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. சில நேரங்களில் காற்றின் திசைவேக மாறுபாடு உள்ளிட்டவற்றால் உராய்வில் ஏற்படும் அழுத்த மாறுபாடுகள் விமானத்துக்குள் சேதங்களை ஏற்படுத்துகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை 172 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று டெல்லியில் இருந்து கொச்சி வழியாக திருவனந்தபுரம் சென்றுகொண்டிருந்தது. கொச்சி - திருவனந்தபுரம் மார்க்கத்தில் விமானம் சென்று கொண்டிருந்த போது விமானத்தில் ஏர் டர்புலன்ஸ் நிகழ்வு ஏற்பட்டது. இதில் விமானத்தில் சிறு அளவில் சேதங்கள் ஏற்பட்டபோதும் பயணிகள் உள்ளிட்ட எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்நிலையில் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கடந்த 17-ஆம் தேதி டெல்லியில் இருந்து விஜயவாடாவுக்கு இடியுடன் கூடிய மழைக்கிடையே சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஏர் டர்புலன்ஸ் நிகழ்வால் பாதிக்கப்பட்டது. இதனால் விமானத்துக்குள் உணவு டிரேக்கள் சிதறிக் கிடக்கும் காட்சிகள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.
விமான ஊழியர்கள் சிலர் லேசான காயம் அடைந்த நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த இரு நிகழ்வுகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Air India , Air India, air friction, damage, personnel, injury
× RELATED விமானப்பணி நேர வரம்புகளை மீறிய...