கொடைக்கானலில் 2வது நாளாக ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகைகளை தொல்லியல் துறையினர் ஆய்வு

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஆதிமனிதர்கள் வாழ்ந்த கல்திட்டைகள், குகைகளை தொல்லியல் துறையினர் 2வது நாளாக ஆய்வு செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை பகுதிகளில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக கல்திட்டைகள், குகைகள் உள்ளன. இவற்றை தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் காந்திராஜன், ஆய்வாளர் சக்திபிரகாஷ்  ஆகியோர் கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து காந்திராஜன் கூறுகையில், ‘‘கொடைக்கானல் மலைப்பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. கீழ்மலை பகுதியான அடுக்கம், தாண்டிக்குடியில் ஆதிமனிதன் வாழ்ந்த  கல்திட்டைகள், குகைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதேபோல் பூம்பாறை பகுதியில் சேர மன்னர்கள் காலத்தை சேர்ந்த சான்றுகள் உள்ளன. இதன்மூலம் சேர மன்னர்கள் பூம்பாறை வந்திருக்கலாம் என தெரியவருகிறது. மேலும் ஆதிமனிதர்கள்  மிளகு போன்ற பொருட்களை வணிகம் செய்திருக்கலாம் என்ற சான்றுகளும் உள்ளன. இதுபற்றி தமிழக அரசுக்கு நாங்கள் தெரிவிப்போம். அகழாய்வு நடத்த அரசுதான் முடிவு செய்ய வேண்டும்’ என்றார்.

Related Stories: