×

அமெரிக்காவில் பிரதமர் மோடி செய்த காரியம்: எளிமையான சிறந்த தலைவர் மோடி என சமூக வலைத்தளங்களில் பாராட்டு

ஹூஸ்டன்: ஹவ்டி மோடி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 7 நாள் பயணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு 11.40 மணியளவில் டெல்லியில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா புறப்பட்டு சென்றார். டெக்சாஸ் மாகாணத்தில்  உள்ள ஹூஸ்டன் நகருக்கு நேற்று பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க வர்த்தக மற்றும் சர்வதேச விவகாரங்கள் துறை இயக்குநர் கிரிஸ்டோபர் ஆல்சன், இந்தியாவுக்கான  அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா உள்ளிட்ட அதிகாரிகள், பிரதமர் மோடியை வரவேற்றனர்.

இதனிடையே, விமானத்தில் இருந்து பிரதமர் மோடி கீழே இறங்கியதும் அவருக்கு பெண் அதிகாரி ஒருவர் பூங்கொத்துகளை வழங்கினார். அதில் இருந்த சில பூக்கள் சிவப்பு கம்பளத்தில் விழுந்தன. உடனடியாக பிரதமர் மோடி கீழே குனிந்து  அந்த பூக்களை எடுத்து தனது பாதுகாப்பு அதிகாரியிடம் அளித்து விட்டார். பிரதமர் மோடியை சுற்றி அவருக்கு பணியாற்றும் வகையில் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்தபொழுதும், அதனை பற்றி கவலை கொள்ளாமல் அவர் எளிமையாக நடந்து  கொண்ட விதம் பற்றிய இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியின் செயலை, சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

சிறிய விஷயங்களைக் கூட மோடி கவனிப்பதாகவும், தூய்மையை வலியுறுத்துவதாகவும் பலர் புகழ்ந்து வருகின்றனர். எளிமையான சிறந்த தலைவர் என்றும் மோடிக்கு பாராட்டு குவிகிறது.இதுபற்றி டுவிட்டரில் ஒருவர், செடியின் ஒரு  பகுதியான பூவை காலால் நசுக்கி விட கூடாது என்ற நம்பிக்கையிலா? அல்லது தூய்மை திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயலா? என தெரிவித்துள்ளார்.இதேபோன்று மற்றொருவர், தனக்கு வழங்கிய பூங்கொத்துகளில் இருந்து கீழே விழுந்த  ஒரு பூவையோ அல்லது செடியின் தண்டையோ உடனடியாக பிரதமர் மோடி எடுத்து தனது பாதுகாவலரிடம் கொடுப்பது என்பது அவரது எளிமையை காட்டுகிறது என தெரிவித்து உள்ளார்.



Tags : Modi ,US , What PM Modi has done in the US: Appreciate social media as the simplest best leader Modi
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...