பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி பரப்பு அதிகரிப்பால் சாமந்தி பூக்கள் விலை வீழ்ச்சி: சாகுபடியாளர்கள் கடும் விரக்தி

பெரம்பலூர்: சாகுபடிப் பரப்பு அதிகரிப்பால் பெரம்பலூர் மாவட்டத்தில் விலை வீழ்ச்சி அடைந்த சாமந்திப் பூக்கள். கிலோ ரூ5க்கு கேட்க ஆளில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.பருத்தி, மக்காச்சோளம் போன்ற மானாவாரிப் பயிர் சாகுபடியில் தமிழகத்தில், பெரம்பலூர் மாவட்டம், முதலிடம் பெற்று வருகிறது. தோட்டக்கலை பயிரான சின்ன வெங்காயத்திலும் பெரம்பலூர் மாவட்டம் தொடர்ந்து தமிழக அளவில் முதலிடம் வகித்து வருகிறது. கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பணப்பயிர்கள் குறிப்பிட்ட அளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களின் சாகுபடி பரப்பு குறைந்து வரும் நிலையில், குறைந்த பரப் பளவில், குறைந்த தண்ணீர் வசதியுடன், குறிப்பிட்ட அளவுக்கு மகசூல் பெறுவதற்காக, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் தற்போது சாமந்திப் பூக்கள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

 குறிப்பாக பெரம்பலூர், எளம்பலூர், தண்ணீர்பந்தல், வல்லாபுரம், வாலிகண்டபுரம், அன்னமங்கலம், அரசலூர், தொண்டமாந்துறை, விசுவக்குடி, சத்திரமனை, தம்பிரான்பட்டி, ரெங்கநாதபுரம், பிள்ளையார் பாளையம், கோரையாறு, மலையாளபட்டி, சோமண்டாப்புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் நடப்பாண்டு சாமந்திப்பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி காந்தி மார்க்கெட், சேலம் மாவட்டம் தலைவாசல் மார்க்கெட், பெரம்பலூர் பூ மார்க்கெட் உள்ளி ட்ட குறிப்பிட்ட இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டாலும், பெரம்பலூர் மாவட்டத்திற்கான தேவை இருந்து வந்தது. இந்த நிலையில் நடப்பாண்டு சாமந்தி பூக்கள் சாகுபடி பரப்பு அதிகரித்ததால் விவசாயிகள் எதிர்பாராத படிக்கு சாமந்திப் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கோயில் விசேஷங்கள், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் மட்டுமன்றி, இறப்பு நிகழ்ச்சிக்கும் அதிகம் தேவைப்படும் சாமந்திப் பூக்களின்தேவை அதிகம் இருந்தும் ஏனோ சாமந்தி பூ விலை போகவில்லை. குறிப்பாக கிலோ 5க்கு கேட்கக்கூட ஆள் இல்லாத நிலைஉள்ளது. இதன் காரணமாக வயல்வெளி யிலேயே அழுகிவரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்ட சாமந்திப்பூ சாகுபடியாளர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.

Related Stories: