சேலத்தை மையமாக கொண்டு உலக சுற்றுலா தினம்: நினைவுகளின் சுழற்சியில் அற்புத அடையாளங்கள்!

சேலம்: ஆண்டு தோறும் செப்டம்பர் 27ம்தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. இதில் தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும், ஒரு மாவட்டத்தை மையமாக வைத்து உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. கடந்தாண்டு (2018) மதுரையை மையமாக கொண்டு  சுற்றுலாத் தினம் கொண்டாடப்பட்டது. நடப்பாண்டு (2019) சேலத்தை மையமாக கொண்டு உலக சுற்றுலாதினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சேலத்தின் பிரதான அடையாளங்களான மேட்டூர் அணை, இயற்ைக எழில் சூழ்ந்த ஏற்காடு, சிற்பக்கலையில் உச்சம் தொடும் தாரமங்கலம் கைலாசநாதர் கோயில், கனிமங்கள் நிறைந்த கஞ்சமலை போன்றவற்றை பின்புலமாக கொண்டை, சிறப்பு அரசு லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இடங்களோடு சேலத்தில் முகவரியாக திகழும் முக்கிய பகுதிகளும் இடம் பெற்றுள்ளது. சேலத்தை மையமாக வைத்து, தமிழகத்தில் நடக்கும் உலக சுற்றுலா தின கொண்டாட்டம், தற்ேபாது சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் எதிரொலியாக மேற்கண்ட அடையாளங்கள் அனைத்தும் தற்போது புதுப்பொலிவு பெற்று வருகிறது. இந்த நேரத்தில் அவற்றின் சிறப்புகளை பெருமிதத்துடன் பகிர்ந்து வருகின்றனர் வரலாற்று ஆர்வலர்கள். கனிமங்கள் புதைந்து கிடக்கும் கஞ்சமலை: சேலத்திருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கஞ்சமலை. இந்த மலையின் அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சித்தேஸ்வர சுவாமி கோயில் உள்ளது.

8ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இக்கோயிலின் சிறப்புகள் குறித்து, திருமந்திரம், சிறுபாணாற்றுப்படை, கொங்கு மண்டல சதகம், கரபுரநாதர் புராணம் போன்ற நூல்களில் குறிப்புகள் உள்ளது. தங்கம், இரும்பு, தாமரை ஆகியவற்றின் கலவை கஞ்சம். இங்கு உயர்தர இரும்பு படிவங்கள்  ஏராளமாக உள்ளது. எளிதில் துருப்பிடிக்காத கஞ்சமலை இரும்பைக் கொண்டுதான் மாவீரன் அலெக்ஸாண்டரின் வாள் செய்யப்பட்டது என்பது வரலாறு. இங்குள்ள பொன்னி ஓடையில் கிடைத்த பொன்னைக் கொண்டு,  சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பொன் கூரை வேயப்பட்டதாகவும் செவிவழி தகவல்கள் உலவுகிறது. அரிய மூலிகைகள் நிறைந்த கஞ்சமலையில், இன்றுவரை சித்தர்கள் உலவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தொடரும் நம்பிக்கை.

தமிழக நெற்களஞ்சியத்தின் நீராதாரம் மேட்டூர் அணை:

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று புகழப்படும் 13 டெல்டா மாவட்டங்களின் 16லட்சம் ஏக்கர் பாசனத்திற்கு நீர்வார்க்கும் ஒப்பற்ற பொக்கிஷம். 18 மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் அட்ஷய பாத்திரம். கர்நாடகாவில் பெருக்கெடுத்து பொங்கி வரும் காவிரி ஆற்றின் குறுக்கே, 1925ம் ஆண்டு துவங்கி  1934ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது மேட்டூர் அணை. கர்னல் எல்லீஸ் என்பவரின் எண்ணத்தில் ரூ.45 கோடியில்  உருவான இந்த அணையானது, அது கட்டப்பட்ட காலகட்டத்தில் உலகிலேயே உயரமான நேர்கோட்டில் அமைந்த அணை என்ற பெருமையை பெற்றது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திற்கும்போது அணை மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகாவாட் மற்றும் காவிரி ஆற்றில் 7 கதவணை மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் எதிரில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் மற்றும் அழகிய புல்தரைகளுடன் கண்ணுக்கு விருந்தளிக்கும் அழகிய பூங்காவும் உள்ளது.

சிற்பக்கலையின் உச்சமான தாரமங்கலம் சிவன்கோயில்:

சேலத்திலிருந்து 24 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தாரமங்கலம் கைலாசநாதர் என்று பக்தர்கள் போற்றும் சிவன் கோயில். சிற்பக்கலையின் உச்சம் தொடும் பெருமைக்குரிய அடையாளம் இது. ஆலயத்தின்  முன்கோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. ஒரு பெரிய தேரை  குதிரைகளும், யானைகளும் இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றமும், சிங்கத்தின் வாயில் உருளும் கல்லும், ராமன் வாலியை வதைக்கும் சிற்பமும், ரதி மன்மதன் சிற்பமும், கல் சங்கிலியும், கல் தாமரையும் வியப்புகளின் பிம்பங்கள். 17ம் நூற்றாண்டை சேர்ந்த கெட்டிமுதலி மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயில், மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் திருவிழாக்களை நடத்திய வரலாற்று சிறப்புக்குரியது. மார்ச் மாதத்தில் சூரிய ஒளி, நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுவது சிலிர்ப்பூட்டும் பரவசம்.

மலைகளின் இளவரசி எழில் மிகுந்த ஏற்காடு:

மலைகளின் இளவரசி என்றும், ஏழைகளின் ஊட்டி என்றும் அழைக்கப்படும் ஏற்காடு, கிழக்கு தொடர்ச்சி மலையின் அங்கமான சேர்வராயன் மலையில் அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ள ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்களும், பசுமை போர்த்திய வனங்களும் பிரதான அடையாளம். படகு இல்லம், ரோஜாத்தோட்டம், மான்பூங்கா, லேடீஸ்சீட், பக்கோடா பாயின்ட், ெசம்மொழி பூங்கா என்று இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளோடு சேர்வராயன் கோயில், தலைச்சோலை அண்ணாமலையார் கோயில் என்று இறைவழிபாட்டுக்கும் ஒப்பற்ற தலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. சேரஅரையமன்னர்கள் ேகாலோச்சிய பகுதி என்பதால் சேர்வராயன் மலை என்று அழைக்கப்படும் வரலாற்று சிறப்பும் இதற்கு உண்டு.

Related Stories: