மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 300 கிராம் தங்கம் பறிமுதல்

மீனம்பாக்கம்: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர்ஏசியா விமானம் நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில், சென்னையை சேர்ந்த அப்துல் அஷீத் (51) என்பவர் சுற்றுலா பயணிகள் விசாவில் மலேசியா  சென்று சென்னை திரும்பினார்.  சுங்க அதிகரிகள் அவரை சோதனை செய்தபோது, அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கோட் ஆகியவற்றில் ஏராளமான பட்டன்கள் வைத்து தைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. சந்தேகத்தின் பேரில்  அவற்றை கழற்றி சோதனை செய்தபோது, அவை அனைத்தும் தங்க பட்டன்கள் என்று தெரியவந்தது. மேலும்,பேண்ட் பெல்ட் மாட்டும் பட்டியில் 7 தங்க தகடுகள் மற்றும் தங்க கிளிப்புகள் இருப்பது தெரிந்தது. இவற்றின் மொத்த எடை 300 கிராம். இதன் சர்வதேச மதிப்பு 11 லட்சம். இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அப்துல்  அஷீத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

* கோயம்பேடு பஸ் நிலையத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட திருமங்கலத்தை சேர்ந்த சாமுவேல் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* பல்லாவரம் ரயில் நிலையம் அருகே, மேற்கு வங்கத்தை சேர்ந்த ரைகன்கான் (26) என்பவரை கத்தி முனையில் மிரட்டி2 ஆயிரத்தை பறித்து சென்ற பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் நகரை சேர்ந்த ஆனந்த் (28) என்பவரை போலீசார் கைது  செய்தனர். தப்பியோடிய கூட்டாளி பல்லாவரம் மலைமேடு பகுதியை சேர்ந்த தமிமுன் அன்சாரியை தேடி வருகின்றனர்.

* மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரமணி (40) என்பவரின் பைக் பெட்டியை உடைத்து, அதில் இருந்த 20 ஆயிரம், 8 லட்சத்திற்கான காசோலை, ஏடிஎம் கார்டு மற்றும் அடையாள அட்டை  ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

* பாரிமுனை பகுதியில் 15 லட்சம் மதிப்புள்ள 185 கிராம் கேட்டமைன் என்ற போதைப்பொருளை   கடத்தி வந்த இலங்கையை சேர்ந்த முகமது ஹாரீஸ் (40), மண்ணடியை சேர்ந்த அபுரார் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* ராயபுரம், கல்மண்டபம்மார்க்கெட் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் விஜய்(15) பைக்கில் ராயபுரம், கல்லறை சாலை வழியாக சென்ற போது, மாநகர பேருந்து மோதி இறந்தான்.   

Related Stories: