நக்சல் பாதிப்புள்ள தண்டேவடாவில் நாளை தேர்தல்: 18,000 போலீசார் குவிப்பு

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் நக்சல்களால் பாஜ எம்எல்ஏ கொல்லப்பட்ட தண்டேவடா சட்டப்பேரவை தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடக்கிறது.சட்டீஸ்கர் மாநிலம், பாஸ்டர் மண்டலத்தில் உள்ள தண்டேவடா சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ.வாக பாஜ.வை சேர்ந்த பீமா மாண்டவி இருந்தார். கடந்த ஏப்ரல் 9ம் தேதி இவர் சென்ற வாகனத்தை  நக்சலைட்கள் வெடிகுண்டு வைத்து  தகர்த்தனர். இதில், மாண்டவி மற்றும் 4 போலீசார் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, காலியாக அறிவிக்கப்பட்ட இந்த தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் ஆளும் இந்த மாநிலத்தில் பாஸ்டர் மண்டலத்தில்  பாஜ வென்ற ஒரே தொகுதி இதுதான். இங்கு 9 வேட்பாளர்கள் களத்தில்  உள்ளனர். காங்கிரஸ் சார்பில் கடந்த 2013ம் ஆண்டு நக்சல் தாக்குதலில் கொல்லப்பட்ட மகேந்திர கர்மாவின் மனைவி தேவ்தி கர்மாவும், பாஜ சார்பில் பீமா மாண்டவியின் மனைவி ஓஜாஷ்வி மாண்டவியும் போட்டியிடுகின்றனர். நக்சல்  ஆதிக்கம் மிகுந்த பகுதி என்பதால், பாதுகாப்புக்கு 18 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: