×

மெட்ரிக் பள்ளிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர் அங்கீகார ஆணை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

மதுரை: மதுரை விரகனூர் ரோட்டில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த, மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: தமிழகத்தில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப், 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை, 60 ஆயிரம் பள்ளிகளில் கணினியுடன் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும்.

மெட்ரிக்குலேசன்  பள்ளிகளுக்கு வழங்கப்படும் தொடர் அங்கீகார ஆணை, விரைவில் 2 வருடங்களுக்கு ஒருமுறை என மாற்றியமைக்கப்பட உள்ளது. மேலும் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து, அங்கீகார ஆணைக்கு  விண்ணப்பித்தவுடனே துரிதமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.மேலும் மெட்ரிக் பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்யவும், முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். 70 லட்சம் மாணவர்களின் கல்வியை செழுமைப்படுத்துவதற்காகவே இந்த அங்கீகார ஆணை வழங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள்  மீது அரசு பாரபட்சம் காட்டாது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் ஷூ, சாக்ஸ் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Sengottaiyan ,Minister ,schools , metric schools,Recognition , Minister Sengottaiyan
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...