×

அதிமுக கூட்டணியில் தான் உள்ளோம் இடைத்தேர்தலில் பாஜ போட்டியா?: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: அதிமுக கூட்டணியில் தான் பாஜ உள்ளது என்றும், 2 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்க பாஜகவின் மத்திய தலைமையிடம் கேட்டிருக்கிறோம். கூட்டணி பற்றி தலைமை முடிவெடுக்கும். ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணியில் நாங்கள்  உள்ளோம். பாஜக-அதிமுக கூட்டணி இடைத்தேர்தலில் வெற்றி பெற கூடிய உழைப்பை கொடுப்போம். மேலும் மகாராஷ்டிரா, அரியானாவில் பாஜவுக்கு வெற்றி பிரமாண்டமாக கிடைக்க போகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Pon Radhakrishnan ,BJP ,AIADMK , AIADMK, alliance, BJP contesting, by-election
× RELATED எங்கள் மீது காட்டும்...