×

நாங்குநேரியில் போட்டியிட விரும்பும் காங்கிரசார் 23, 24ம்தேதி விருப்ப மனுக்கள் பெறலாம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரசார் வரும் 23 மற்றும் 24ம்தேதிகளில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: நாங்குநேரி  இடைத்தேர்தல் அக்டோபர் 21ம்தேதி நடக்கிறது. இதில் திமுக- காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி  கட்சிகளின் சார்பில் காங்கிரஸ்  வேட்பாளர் போட்டியிட ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 இதையொட்டி, நாங்குநேரியில் போட்டியிட விருப்பமுள்ள காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனுக்களை வரும் செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்களில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் விண்ணப்ப  கட்டணமாக 1,000 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் 25ம் தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்குள், விருப்ப மனு கட்டணமாக பொது பிரிவினருக்கு 25,000, மகளிர் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு 10,000, ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி’  என்ற பெயரில் வரைவோலையாக (டிமாண்ட் டிராப்) செலுத்தி திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

Tags : Nominees ,Congressman 23 , compete , nunnery, obtained , KSAlagiri Notice
× RELATED மூன்று நாட்களில் 48 பேர் மனு தாக்கல்...